TNPSC Field Assistant Recruitment 2025 தமிழ்நாடு மின்சாரத் துறையில் 1794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், 02.10.2025 தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்னென்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் விண்ணப்பிக்கும் முறை எப்படி என்பது போன்ற முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
Description | Details |
வேலை பிரிவு | TN Government Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Tamil Nadu Public Service Commission |
காலியிடங்கள் | 1794 |
பணிகள் | கள உதவியாளர் (Field Assistant) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 02.10.2025 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC Field Assistant Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), கள உதவியாளர் (Field Assistant) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 1794 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விரிவான தகவல்களைப் பெற, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடலாம்.
TNPSC Field Assistant Recruitment 2025 கல்வித் தகுதி:
TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 கள உதவியாளர் (Field Assistant) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்சான்றிதழ் கவுன்சிலால் (National Council for Training and Vocational Trade) வழங்கப்பட்ட எலக்ட்ரீஷியன் (Electrician), வயர்மேன் (Wireman) அல்லது எலக்ட்ரிக்கல் டிரேட் (Electrical Trade) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (National Trade Certificate) அல்லது தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) பெற்றிருக்க வேண்டும்.
TNPSC Field Assistant Recruitment 2025 வயது வரம்பு:
கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு, பிரிவுவாரியாகப் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:
- ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை.
- பொதுப் பிரிவினர் (Others): அதிகபட்ச வயது 32.
- மாற்றுத்திறனாளிகள் (PwBD): 42 வயது வரை.
- முன்னாள் இராணுவத்தினர்: 50 வயது வரை.
- ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை.
இதர பிரிவினர் (BC, MBC, SC, ST):
- BC (OBCM)s, BCMs, MBCs/DCs: அதிகபட்ச வயது 34.
- SCs, SC(A)s மற்றும் STs: அதிகபட்ச வயது 37.
இதர பிரிவினருக்கான சலுகை:
- மாற்றுத்திறனாளிகள் (PwBD): BC/MBC பிரிவினருக்கு 44 வயது வரையும்,
- SC/ST பிரிவினருக்கு 47 வயது வரையும்.
- முன்னாள் இராணுவத்தினர்: 55 வயது வரை.
TNPSC Field Assistant Recruitment 2025சம்பள விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கள உதவியாளர் (Field Assistant) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
TNPSC Field Assistant Recruitment 2025 தேர்வு செயல்முறை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 வேலைவாய்ப்புக்கான விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC Field Assistant Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Field Assistant பணிக்கான விண்ணப்பக் கட்டணம் குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிரிவினர்: ரூ.100
- பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள்: ரூ.50
TNPSC Field Assistant Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025
TNPSC Field Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil PDF | Click Here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு English PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |