IB Security Assistant Motor Transport Recruitment 2025: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு புலனாய்வுத் துறையில் வேலை; ரூ.60,100 வரை சம்பளம்!

IB Security Assistant Motor Transport Recruitment 2025: மத்திய அரசு புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கு மொத்தம் 455 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 28.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய மாநில அரசு வேலை 2025
துறைகள்Intelligence Bureau (IB)
புலனாய்வுப் பிரிவு (IB)
காலியிடங்கள்455
பணிகள்பாதுகாப்பு உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி28.09.2025
பணியிடம்இந்தியா மட்டும் தமிழகம் முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mha.gov.in/en

Intelligence Bureau காலிப்பணியிடங்கள்:

இந்திய உளவுத்துறை (Intelligence Bureau – IB) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு உதவியாளர் (மோட்டார் போக்குவரத்து) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை உளவுத்துறை அலுவலகங்களிலிருந்து (Subsidiary Intelligence Bureaus) பெறப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது மாநிலத்திற்கான காலியிடங்களை கீழே உள்ள அட்டவணையில் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

IB பாதுகாப்பு உதவியாளர் (மோட்டார் போக்குவரத்து) காலியிடங்கள் 2025 – மாநில வாரியாக

மாநிலம் காலியிடங்கள்
அகர்தலா3
அகமதாபாத்8
ஐஸ்வால்7
அமிர்தசரஸ்7
பெங்களூரு6
போபால்10
புவனேஸ்வர்11
சண்டிகர்12
சென்னை11
டேராடூன்11
டெல்லி/IB தலைமையகம்127
கேங்டாக்10
குவஹாத்தி11
ஹைதராபாத்7
இம்பால்8
இட்டாநகர்19
ஜெய்ப்பூர்16
ஜம்மு13
காலிம்போங்3
கோஹிமா10
கொல்கத்தா15
லே18
லக்னோ7
மீரட்5
மும்பை15
நாக்பூர்4
பனாஜி2
பாட்னா12
ராய்ப்பூர்8
ராஞ்சி8
ஷில்லாங்4
சிம்லா6
சிலிகுரி4
ஸ்ரீநகர்20
திருவனந்தபுரம்9
வாரணாசி7
விஜயவாடா9
மொத்தம்455

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IB Security Assistant Motor Transport Recruitment 2025 கல்வித் தகுதி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:

  • வசிப்பிடம்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வசிப்பிடத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம்: இலகு ரக மோட்டார் வாகன (LMV) ஓட்டுநர் உரிமம் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு மற்றும் குறைந்தது ஓர் ஆண்டு கார் ஓட்டிய அனுபவம் அவசியம்.

IB Security Assistant Motor Transport Recruitment 2025 வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் வயது 28.09.2025 தேதியின்படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
  • அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கணவரை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் சட்டப்படி பிரிந்து வாழும் பெண்களுக்கு கீழ்க்கண்டவாறு வயது தளர்வு அளிக்கப்படும்:

  • SC/ST பிரிவினர்: 40 வயது வரை
  • பொதுப் பிரிவினர்: 35 வயது வரை
  • OBC பிரிவினர்: 38 வயது வரை

IB Security Assistant Motor Transport Recruitment 2025 சம்பள விவரம்:

புலனாய்வுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, நிலை 3-ன் கீழ் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.

இது தவிர, மேலும் சில சலுகைகளும் உண்டு:

  • விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான கூடுதல் ஊதியம் அளிக்கப்படும்.
  • அடிப்படை சம்பளத்தில் 20% சிறப்புப் பாதுகாப்பு ஒதுக்கீடு (Special Security Allowance) வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

Intelligence Bureau பிரிவில் உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படும்.

  • Tier-I எழுத்துத் தேர்வு (100 மதிப்பெண்கள்)
  • Tier-II Assessment (50 Marks)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification – DV): நிலை-I மற்றும் II-ல் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இதில் கல்வி சான்றிதழ்கள், வயது சான்று, சாதி சான்றிதழ் (பொருந்தினால்), அனுபவ சான்றிதழ் மற்றும் பிற தகுதிக்கான சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும்.
  • மருத்துவ பரிசோதனை (Medical Examination – ME): இந்தப் பணியிடத்திற்கு உடல் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய, IB தரநிலைகளின்படி மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • மதுரை
  • சேலம்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • வேலூர்

Intelligence Bureau விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST பிரிவினர் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் ₹550 செலுத்தினால் போதுமானது.
  • பொதுப் பிரிவு, EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் ₹650 செலுத்த வேண்டும்.

IB Security Assistant Motor Transport Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2025

IB Security Assistant Motor Transport Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 6 முதல் 28-ம் தேதிக்குள், https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
(06.09.2025 முதல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்)
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment