Madras High Court Recruitment 2025: சென்னை உயர் நீதிமன்றம்(MHC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant Programmer (உதவி புரோகிராமர்) பணியிடங்கள் போன்ற பணிகளுக்கு மொத்தம் 41 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 09.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சென்னை உயர் நீதிமன்றம் (Chennai High Court) |
காலியிடங்கள் | 41 |
பணிகள் | உதவி புரோகிராமர் பதவிகள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 09.09.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/ |
Madras High Court Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
சென்னை உயர் நீதிமன்றம்(MHC) வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
உதவி புரோகிராமர் | 41 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras High Court Recruitment 2025 கல்வித் தகுதி:
சென்னை உயர் நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- BE., B.Tech, MCA, அல்லது M.Sc., முடித்தவர்கள் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- B.Sc., அல்லது BCA முடித்தவர்கள் மென்பொருள் உருவாக்கத்தில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- M.E., அல்லது M.Tech முடித்தவர்களுக்கு ஒரு வருட அனுபவம் போதுமானது.
கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), மென்பொருள் பொறியியல் (Software Engineering), செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (Artificial Intelligence and Machine Learning), அல்லது கணினி பயன்பாடு (Computer Application) ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Madras High Court Recruitment 2025 வயது வரம்பு:
சென்னை உயர் நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- மாற்றுத்திறனாளிகள் (PWD): பொதுவான வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
- ஒதுக்கப்பட்ட பிரிவினர் (SC / SC(A) / ST / MBC & DC / BC / BCM): குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 37.
- பொதுப் பிரிவினர் / ஒதுக்கப்பட்ட பிரிவில் அல்லாதோர்: குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 32.
- (தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பொதுப் பிரிவினர் என கருதப்படுவர்.)
- பணியில் உள்ளவர்கள் (In-Service): குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 37.
Madras High Court Recruitment 2025 சம்பள விவரம்:
உதவி புரோகிராமர் பதவிக்கு மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,31,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது ஊதிய நிலை-13-இன் கீழ் வருகிறது.
Madras High Court Recruitment 2025 தேர்வு செயல்முறை:
- எழுத்துத் தேர்வு (120 மதிப்பெண்கள்),
- திறன் தேர்வு (50 மதிப்பெண்கள்)
- நேர்காணல் (25 மதிப்பெண்கள்)
ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Madras High Court Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC / SC(A)/ST/PWD/DW பிரிவினருக்கு: கட்டணம் இல்லை
- இதர விண்ணப்பதாரர்களுக்கு: ₹1000
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
Madras High Court Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2025
Madras High Court Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை உயர் நீதிமன்றம்(MHC) 2025 வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான (https://www.mhc.tn.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |