TNSTC Recruitment 2025: தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை – 1588 காலியிடங்கள் || சம்பளம்:ரூ.9000/-

TNSTC Recruitment 2025: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (TNSTC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1588 Graduate Apprentices (Engineering/Technology), Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 1588 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 18.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட்
Tamilnadu State Transport Corporation Ltd(TNSTC)
காலியிடங்கள்1588
பணிகள்Graduate Apprentices (Engineering/Technology), Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி18.10.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nats.education.gov.in/

TNSTC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (TNSTC) 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Graduate Apprentices (Engineering/Technology) Mechanical/Automobile Engineering399
Civil Engineering189
Electrical and Electronics Engineering20
Computer Science and Engineering / Information Technology12
Technician (Diploma) Apprentices – Mechanical/Automobile Engineering
205
Civil Engineering24
Electrical and Electronics Engineering25
Computer Science and Engineering / Information Technology07
Non-Engineering Graduate Apprentices – (BA/ BSc., / B.Com., / BBA/ BBM/ BCA etc)569
மொத்தம்1588

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSTC Recruitment 2025 கல்வித் தகுதி:

Graduate Apprentices (Engineering/Technology) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் ஒரு சட்டப்பூர்வ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முதல் வகுப்பு (First Class) பெற்ற முழுநேர பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பட்டம் (Degree in Engineering or Technology) பெற்றிருக்க வேண்டும். Technician (Diploma) Apprentices பணிக்கு, மாநில அரசால் நிறுவப்பட்ட தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட முழுநேர பொறியியல் அல்லது தொழில்நுட்ப டிப்ளமோ (Diploma in Engineering or Technology) தகுதி அவசியமாகும். மேலும், Non-Engineering Graduate Apprentices பிரிவிற்கு, யு.ஜி.சி (UGC) அங்கீகாரம் பெற்ற சட்டப்பூர்வ பல்கலைக்கழகம் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற கலை, அறிவியல், வணிகம் சார்ந்த துறைகளில் பெற்ற முழுநேர பட்டப்படிப்பு (Degree) தகுதி தேவை.

TNSTC Recruitment 2025 வயது வரம்பு:

TNSTC அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்ச வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு பொதுவாக 29 முதல் 30 வயதுக்குள் இருக்கும்.

TNSTC Recruitment 2025 சம்பள விவரம்:

Graduate Apprentices (Engineering/Technology) – Rs.9000/-

Technician (Diploma) Apprentices – Rs.8000/- 

Non-Engineering Graduate Apprentices – Rs.9000/- 

TNSTC Recruitment 2025 தேர்வு செயல்முறை:

தகுதிப் பட்டியல் (Merit List)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

TNSTC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

TNSTC Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025

TNSTC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (TNSTC) 2025 ஆம் ஆண்டின் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றலாம். முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nats.education.gov.in/-ல சென்று பதிவு (Register) செய்ய வேண்டும். இந்த இணையதளப் பதிவு கட்டாயமாகும். பதிவு செய்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய விரிவான வழிமுறைகள் மற்றும் முழு விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) தெரிந்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment