12வது போதும் RRB NTPC ரயில்வே வேலைவாய்ப்பு 2025 – 3050 பணியிடங்கள்; இப்போதே விண்ணப்பிக்கவும்!

RRB Recruitment 2025:மத்திய அரசு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Railway Recruitment Board (RRB) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist, Trains Clerk Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 3050 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 27.11.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுcentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Railway Recruitment Board (RRB)
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்
காலியிடங்கள்3050
பணிகள்Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist, Trains Clerk Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி27.11.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbapply.gov.in/

RRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Railway Recruitment Board (RRB) வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Commercial – Ticket Clerk  
Accounts Clerk – Typist
Junior Clerk – Typist 
Trains Clerk Commercial – Ticket Supervisor

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RRB Recruitment 2025 கல்வித் தகுதி:

இந்திய இரயில்வேயில் உள்ள இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பொதுவாக 12 ஆம் வகுப்பு போதுமானது.

RRB Recruitment 2025 வயது வரம்பு:

இந்திய இரயில்வேயில் உள்ள இந்த பதவிகளுக்கும் பொதுவான வயது வரம்பு, 18 முதல் 30 வயது வரை என்பதாகும்.

RRB Recruitment 2025 சம்பள விவரம்:

  1. Commercial – Ticket Clerk – Rs.21,700/-
  2. Accounts Clerk – Typist – Rs.19,900/- 
  3. Junior Clerk – Typist – Rs.19,900/-  
  4. Trains Clerk – Rs.19,900/-  

RRB Recruitment 2025 தேர்வு செயல்முறை:

இந்திய ரயில்வே பணிகளுக்கான தேர்வு செயல்முறையானது பொதுவாக நான்கு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது. முதலில், முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும் (First Stage Computer Based Test). அதில் தகுதி பெறுபவர்கள் இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (Second Stage Computer Based Test)எழுத அனுமதிக்கப்படுவர். அடுத்ததாக, பதவியின் தேவைக்கேற்ப தட்டச்சுத் திறன் தேர்வு Typing Skill Test அல்லது CBAT (கணினி அடிப்படையிலான திறனறி சோதனை) நடைபெறும். இறுதியாக, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆவணச் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (ME) ஆகியவை மேற்கொள்ளப்படும்.

RRB Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

RRB Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025

RRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு, RRB இணையதளத்திற்கு (https://www.rrbapply.gov.in/) சென்று ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு 28.10.2025 அன்று தொடங்கப்பட்டு, 27.11.2025 அன்று இரவு 11.59 மணிக்கு முடிவடையும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment