BEML Recruitment 2025 (BEML) :பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Management Trainee, Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, மற்றும் Operatorபோன்ற பணிகளுக்கு மொத்தம் 656 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 12.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | BEML Recruitment பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) |
காலியிடங்கள் | 656 |
பணிகள் | Management Trainee, Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel,Operator |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 12.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.bemlindia.in/careers/ |
BEML Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
ஆபரேட்டர் (Operator) | 440 |
மேலாண்மைப் பயிற்சி (Management Trainee) | 100 |
பாதுகாப்புப் பணியாளர் (Security Guard) | 44 |
தீயணைப்புப் பணியாளர் (Fire Service Personnel) | 12 |
செவிலியர் (Staff Nurse) | 10 |
மருந்தாளுநர் (Pharmacist) | 04 |
சேவை பணியாளர் (Service Personnel) | 46 |
மொத்த காலியிடங்கள் | 656 |
BEML Recruitment 2025 கல்வித் தகுதி:
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பிற்கான கல்வித் தகுதிகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஆபரேட்டர் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் ஐடிஐ மற்றும் ஒரு வருட என்ஏசி/என்சிவிடி தேர்வில் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலாண்மைப் பயிற்சி (Management Trainee) பணிக்கு, மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- செக்யூரிட்டி கார்டு மற்றும் தீயணைப்புத் துறைப் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
- ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க, பி.எஸ்சி (நர்சிங்) அல்லது 60% மதிப்பெண்களுடன் 3 வருட நர்சிங் & மிட்வைஃபெரி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- ஃபார்மசிஸ்ட் பணிக்கு, 60% மதிப்பெண்களுடன் 2 வருட முழுநேர மருந்தியல் டிப்ளமோ முடித்து, மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- சேவைப் பணியாளர் பணிக்கு, டிப்ளமோ அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
ஒவ்வொரு பணிக்கும் தேவையான அனுபவம், வயது வரம்பு மற்றும் பிற கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
BEML Recruitment 2025 வயது வரம்பு:
அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெவ்வேறு பணிகளுக்கான வயது வரம்பு
- ஆபரேட்டர், மேனேஜ்மென்ட் டிரெய்னி, செக்யூரிட்டி கார்டு, ஃபயர் சர்வீஸ் பர்சனல், பார்மசிஸ்ட் மற்றும் சர்வீஸ் பர்சனல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 18 முதல் 29 ஆண்டுகள் ஆகும்.
- ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு மட்டும் வயது வரம்பு 18 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.
BEML Recruitment 2025 சம்பள விவரம்:
வெவ்வேறு பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
- சர்வீஸ் பர்சனல்: ரூ. 27,000 – ரூ. 32,500/-
- ஆபரேட்டர்: ரூ. 16,900/-
- மேனேஜ்மென்ட் டிரெய்னி: ரூ. 40,000 – ரூ. 1,40,000/-
- செக்யூரிட்டி கார்டு: ரூ. 16,900 – ரூ. 60,650/-
- ஃபயர் சர்வீஸ் பர்சனல்: ரூ. 16,900 – ரூ. 60,650/-
- ஸ்டாஃப் நர்ஸ்: ரூ. 18,780 – ரூ. 67,390/-
- பார்மசிஸ்ட்: ரூ. 16,900 – ரூ. 60,650/-
BEML Recruitment 2025 தேர்வு செயல்முறை:
ஸ்டாஃப் நர்ஸ், பார்மசிஸ்ட், சர்வீஸ் பர்சனல், செக்யூரிட்டி கார்டு, ஃபயர் சர்வீஸ் பர்சனல் மற்றும் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு மட்டும், எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும்.
BEML Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் முக்கிய தேதிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
- மேலாண்மைப் பயிற்சி (Management Trainee) பதவிக்கு, எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 கட்டணமாகும்.
- ஸ்டாஃப் நர்ஸ், மருந்தாளுநர் (Pharmacist), சேவைப் பணியாளர்கள் (Service personnel), பாதுகாப்புப் பணியாளர்கள் (Security Guard), தீயணைப்புப் பணியாளர்கள் (Fire Service personnel) மற்றும் ஆபரேட்டர் பதவிகளுக்கு, எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 200 கட்டணமாகும்.
- அனைத்து கட்டணங்களையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
BEML Recruitment 2025 முக்கிய தேதிகள்
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.082025
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி: 12.09.2025
BEML Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (Bharat Earth Movers Limited) நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, நீங்கள் www.bemlindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12.09.2025 என்பதால், அதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை 20.08.2025 அன்று தொடங்கியது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |