IBPS RRB Recruitment 2025: தமிழ்நாடு கிராம வங்கியில் 13,217 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ரூ.35,000 வரை சம்பளம்!

IBPS RRB Recruitment 2025: தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Office AssistantOfficer Scale I (Assistant Manager)Officer Scale-II (Manager) மற்றும் Officer Scale-III (Senior Manager)  போன்ற பணிகளுக்கு மொத்தம் 13217 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 21.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்வங்கி பணியாளர் தேர்வாணையம்
Institute of Banking Personnel Selection (IBPS)
காலியிடங்கள்13,217
பணிகள்Office Assistant, Officer Scale I (Assistant Manager), Officer Scale-II (Manager) மற்றும் Officer Scale-III (Senior Manager) 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.09.2025 
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ibps.in/

IBPS RRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கிராம வங்கியில் வேலைவாய்ப்பு (Institute of Banking Personnel Selection 2025) பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்7972
அதிகாரி (Scale-I) 3907
அதிகாரி (Scale-II) 1139
அதிகாரி (Scale-III) 199
மொத்தம்13217

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IBPS RRB Recruitment 2025 கல்வித் தகுதி விவரங்கள்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி செப்டம்பர் 21-ம் தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்

  • கல்வி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • திறன்: தமிழ் மொழி மற்றும் கணினிப் பயன்பாட்டில் திறன் அவசியம்.
  • அனுபவம்: இந்த பதவிக்கு முன் அனுபவம் தேவையில்லை.

அதிகாரி (Scale-I)

  • கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேவை. வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • திறன்: தமிழ் மற்றும் கணினிப் பயன்பாட்டில் திறன் அவசியம்.
  • அனுபவம்: அனுபவம் தேவையில்லை.

அதிகாரி (Scale-II) – பொதுப் பிரிவு

  • கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வங்கி, நிதி, வேளாண்மை, கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
  • அனுபவம்: வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
  • குறிப்பு: CA, சட்டம், MBA, மார்க்கெட்டிங் அல்லது விவசாயம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரி (Scale-II) – துறை சார்ந்த பிரிவு

  • கல்வி: எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: 1 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

அதிகாரி (Scale-III)

அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

IBPS RRB Recruitment 2025 வயது வரம்பு:

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி (IBPS RRB) ஆட்சேர்ப்பு 2025-க்கான வயது வரம்பு மற்றும் தளர்வு விவரங்கள்:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

  • OBC பிரிவினர்: 13 ஆண்டுகள்.
  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்.
  • முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள்.
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவில் உள்ளவர்களுக்கு:
  • பொது மற்றும் EWS பிரிவினர்: 10 ஆண்டுகள்.
  • SC/ST பிரிவினர்: 15 ஆண்டுகள்.

IBPS RRB Recruitment 2025 சம்பள விவரம்:

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி (IBPS RRB) ஆட்சேர்ப்பு 2025-க்கான பதவிகளின் சம்பள விவரங்கள்:

  • Officer Scale-III (Senior Manager): ரூ. 80,000
  • Office Assistant (Multipurpose): ரூ. 35,000
  • Officer Scale I (Assistant Manager): ரூ. 60,000
  • Officer Scale-II (Manager): ரூ. 75,000

IBPS RRB Recruitment 2025 தேர்வு செயல்முறை:

பதவிகளுக்கேற்ப தேர்வு முறைகள் மாறுபடுகின்றன.

அலுவலக உதவியாளர்

இப்பணிக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் உண்டு:

  1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  2. முதன்மைத் தேர்வு (Main Exam)

அதிகாரி (Scale-I)

இந்த பதவிக்கு மூன்று கட்டத் தேர்வுகள் நடத்தப்படும்:

  1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)
  2. முதன்மைத் தேர்வு (Main Exam)
  3. நேர்காணல் (Interview)

அதிகாரி (Scale-II மற்றும் Scale-III)

இந்த உயர் பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வுடன் நேர்காணல் நடைபெறும்:

  1. நேர்காணல் (Interview)
  2. ஆன்லைன் எழுத்துத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப் பிரிவினருக்கு ரூ.850.
  • SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175.
  • கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே காணலாம்.

IBPS RRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், செப்டம்பர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
Group “A” – Officers ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
Group “B” Office Assistants ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment