SBI Recruitment 2025: பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 59 காலிப்பணியிடங்கள்…ரூ.64,820 சம்பளம்!

SBI Recruitment 2025: மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Manager, Deputy Manager (Products – Digital Platforms) பணிகளுக்கு மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பாரத ஸ்டேட் வங்கி (SBI)
State Bank of India
காலியிடங்கள்59
பணிகள்Manager, Deputy Manager
(Products – Digital Platforms)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி02.10.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sbi.bank.in/

SBI Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கி (SBI) வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Manager (Products – Digital Platforms)34
Deputy Manager(Products – Digital Platforms)25
மொத்தம்59

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI Recruitment 2025 கட்டாய கல்வித் தகுதி (Mandatory Educational Qualification)

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து, B.E. / B.Tech பட்டப்படிப்பை IT, Computers, Computer Science, Electronics, Electrical, அல்லது Electronics & Telecommunication பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
  • அல்லது, Master of Computer Applications (MCA) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட தகுதிகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

கூடுதல் தகுதிகள் (Preferred Qualifications)

  • MBA அல்லது Executive MBA படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணி அனுபவம் (Work Experience)

  • Deputy Manager (Products – Digital Platforms) பதவிக்கு, இதே துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
  • Manager (Products – Digital Platforms) பதவிக்கு, டிஜிட்டல் பேமென்ட்ஸ்(Digital Payments), ஃபாஸ்ட்டேக்(Fastag), ஃபின்டெக் (FinTech), டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்(Digital Solutions) போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

SBI Recruitment 2025 வயது வரம்பு:

  • Manager (Products – Digital Platforms): குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை.
  • Deputy Manager (Products – Digital Platforms): குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை.

வயது வரம்பு தளர்வு (Relaxation of Upper age limit)

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள் தளர்வு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள் தளர்வு.
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள் தளர்வு.
  • PwBD (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள் தளர்வு.
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள் தளர்வு.
  • முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen): அரசாங்க கொள்கையின்படி தளர்வு.

SBI Recruitment 2025 சம்பள விவரம்:

  • Manager (Products – Digital Platforms): மாதம் ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280 வரை.
  • Deputy Manager (Products – Digital Platforms): மாதம் ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை.

SBI Recruitment 2025 தேர்வு செயல்முறை:

  1. Shortlisting: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில், நேர்காணலுக்குத் தகுதியானவர்கள் Shortlist செய்யப்படுவார்கள்.
  2. நேர்காணல் (Interview): Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதன் மூலம் அவர்களின் தகுதி, அனுபவம் மற்றும் பணிக்குத் தேவையான திறன்கள் மதிப்பீடு செய்யப்படும்.

இந்த இரண்டு படிநிலைகளின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.

SBI Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST / முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) / PwBD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை (Nil).
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (General, OBC, EWS): ரூ. 750 கட்டணம்.

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே.

SBI Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

SBI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment