Southern Railway Recruitment 2025: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2025 – 3518 Apprentice காலியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

Southern Railway Recruitment 2025: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  Apprentices Training போன்ற பணிகளுக்கு மொத்தம் 3518 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தெற்கு ரயில்வே
காலியிடங்கள்3518
பணிகள்Apprentices Training
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி25.09.2025
பணியிடம்பெரம்பூர், கோயம்புத்தூர், சென்னை, பொன்மலை, மதுரை, பாலக்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sr.indianrailways.gov.in/

Southern Railway Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Carriage & Wagon Works, Perambur1394
Central Workshop, Golden Rock857
Signal and Telecom Workshop Units, Podanur1267
மொத்தம்3518

Southern Railway Recruitment 2025 கல்வித் தகுதி:

Fresher Category:-

  1. Fitter, Painter & Welder – 10ஆம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Medical Laboratory Technician (Radiology, Pathology, Cardiology) Trades – 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ex.ITI Category:-

  1. Fitter, Machinist, MMV, Turner, Diesel Mechanic, Carpenter, Painter, Welder(G&E), Wireman, Advance Welder, Plumber, Draughtsman (Civil) & Mech.R&AC – 10ஆம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ-யில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Electrician – 10ஆம் வகுப்பில் அறிவியல் ஒரு பாடமாக இருந்து (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ-யில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  3. Electronics Mechanic – 10ஆம் வகுப்பில் அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) மற்றும் கணிதம் பாடங்களுடன் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ-யில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  4. Secretarial Assistant & Stenographer (English) – 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ-யில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  5. Information and Communication Technology System Maintenance – 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ-யில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  6. FCOPA/PASSA – 10ஆம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்று, “Computer Operator & Programming Assistant” பிரிவில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:பயிற்சி முடித்த Apprentices, பொறியியல் பட்டதாரி அல்லது டிப்ளமோ அல்லது தொழிற்பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள், ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் பெற்றிருந்தால், இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் என்பது SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தாது.

பயிற்சி காலம் (Training Duration)

Fresher Category (முன்அனுபவம் இல்லாதோர்):

  1. Welder – 1 வருடம் 3 மாதங்கள்
  2. Fitter & Painter – 2 வருடங்கள்
  3. Medical Lab Technician (Cardiology, Radiology & Pathology) – 1 வருடம் 3 மாதங்கள்

Ex.ITI Category (ஐ.டி.ஐ முடித்தவர்கள்):

ஐ.டி.ஐ முடித்த விண்ணப்பதாரர்களுக்கு, 1992 ஆம் ஆண்டின் அப்ரண்டிஸ் விதிகளின்படி, பயிற்சி காலத்தில் தளர்வு (rebate) வழங்கப்படும். இந்த விதிமுறைகள் அவ்வப்போது திருத்தப்படும்.

Southern Railway Recruitment 2025 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு, Freshers 22 வயதாகவும், Ex-ITI/MLT-க்கு 24 வயதாகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2025 சம்பள விவரம்:

  • Freshers (10ஆம் வகுப்பு): மாதம் ₹6,000
  • Fresheres (12ஆம் வகுப்பு): மாதம் ₹7,000
  • Ex-ITI (ஐ.டி.ஐ முடித்தவர்கள்): மாதம் ₹7,000

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2025 தேர்வு செயல்முறை:

மெரிட் பட்டியல் (Merit List)

  • Freshers: 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும்.
  • Ex-ITI விண்ணப்பதாரர்களுக்கு: 10ஆம் வகுப்பு மற்றும் ITI மதிப்பெண்களின் சராசரியின் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்படும்.
  • எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இல்லை.

சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

  • சரிபார்ப்பு முடிந்த பின்னரே இறுதித் தேர்வு உறுதி செய்யப்படும்.
  • Merit பட்டியலில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
  • அனைத்து அசல் கல்வி மற்றும் தனிப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.

Southern Railway Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டண முறை: ஆன்லைன்.
  • பெண் / SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை.
  • மற்றவர்களுக்கு: ₹100.

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025

Southern Railway Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sr.indianrailways.gov.in/ -க்குச் சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இணையவழிப் பதிவு 25.08.2025 அன்று தொடங்கி, 25.09.2025 அன்று மாலை 05.00 மணி வரை நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment