தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-ஆம் ஆண்டிற்கான 881 Guest Lecturer பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; இப்போதே விண்ணப்பிக்கவும்!

TNGASA Recruitment 2025: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி Tamil Nadu Government Arts and Science College (TNGASA) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Guest Lecturers Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 881 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 08.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி Tamil Nadu Government Arts and Science College (TNGASA)
காலியிடங்கள்881
பணிகள்Guest Lecturers Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி08.10.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tngasa.org/

TNGASA Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி Tamil Nadu Government Arts and Science College (TNGASA) 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Guest Lecturers – 881 Posts

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNGASA Recruitment 2025 கல்வித் தகுதி:

குறைந்தபட்ச கல்வித் தகுதி என்னவென்றால், முதுநிலை பட்டத்தில் (Post-Graduate degree) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

மேலும், முதுநிலை பட்டத்துடன் கீழ்க்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:

  • பி.எச்.டி (Ph.D)
  • NET (தேசிய தகுதித் தேர்வு)
  • SLET (மாநில அளவிலான தகுதித் தேர்வு)
  • SET (மாநில அளவிலான தகுதித் தேர்வு)

TNGASA Recruitment 2025 வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNGASA Recruitment 2025 சம்பள விவரம்:

Guest Lecturers மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.25,000/- வழங்கப்படும்.

TNGASA Recruitment 2025 தேர்வு செயல்முறை:

Academic Qualification – கல்வித் தகுதி அல்லது கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள்

Interview – நேர்முகத் தேர்வு

TNGASA Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.

TNGASA Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2025

TNGASA Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையதளமான (https://tngasa.org/) மூலம் இணையவழிப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இணையவழிப் பதிவு 24.09.2025 அன்று தொடங்கி 08.10.2025 அன்று மாலை 5.00 மணியுடன் முடிவடையும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment