TNRD Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 375 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 30.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (Tamil Nadu Rural Development and Panchayat Department) |
காலியிடங்கள் | 375 |
பணிகள் | பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 30.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnrd.tn.gov.in/ |
TNRD Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
பதிவறை எழுத்தர் | 33 |
அலுவலக உதவியாளர் | 189 |
ஓட்டுநர் | 68 |
இரவு காவலர் | 85 |
மொத்தம் | 375 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNRD Recruitment 2025 கல்வித் தகுதி:
- அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- பதிவறை எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவு காவலர்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
TNRD Recruitment 2025 வயது வரம்பு:
அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 அன்றுள்ளபடி வயது வரம்பு கணக்கிடப்படும்.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் பதவிகள்:
- குறைந்தபட்ச வயது: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது:
- பொதுப் பிரிவினர்: 32 வயது
- பிசி/எம்பிசி பிரிவினர்: 34 வயது
- எஸ்சி/எஸ்டி பிரிவினர்: 37 வயது
TNRD Recruitment 2025 சம்பள விவரம்:
ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஈப்பு ஓட்டுநர்: நிலை 8-ன் கீழ் மாதச் சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை.
- அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர்: நிலை 1-ன் கீழ் மாதச் சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை.
- பதிவறை எழுத்தர்: மாதச் சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை.
TNRD Recruitment 2025 தேர்வு செயல்முறை:
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, நேர்காணல் மூலம் நடத்தப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும். உங்கள் கல்வி மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
TNRD Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ஆதிதிராவிடர்/பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-
- மற்ற பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-
TNRD Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025
TNRD Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், https://tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |