TNUSRB Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Constable Grade II, Jail Warder Grade II, Firemen Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 3644 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 21.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 |
துறைகள் | Tamil Nadu Uniformed Services Recruitment Board தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் |
காலியிடங்கள் | 3644 |
பணிகள் | Constable Grade II, Jail Warder Grade II, Firemen Posts |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 21.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnusrb.tn.gov.in/ |
TNUSRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Constable Grade II | 2833 |
Jail Warder Grade II | 180 |
Firemen | 631 |
மொத்தம் | 3644 |
TNUSRB Recruitment 2025 கல்வித் தகுதி:
கட்டாயத் தகுதி: விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNUSRB Recruitment 2025 வயது வரம்பு:
விண்ணப்பதாரர் ஜூலை 1, 2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்பட்டவராக இல்லாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு பின்வருமாறு:-
- முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் துணை ராணுவப் படையினர் (அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அல்லது விண்ணப்பம் பெற கடைசித் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஓய்வு பெற உள்ளவர்கள்): 37 வயது
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர்: 28 வயது
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர்: 31 வயது
- திருநங்கைகள்: 31 வயது
- ஆதரவற்ற விதவைகள்: 37 வயது
TNUSRB Recruitment 2025 சம்பள விவரம்:
- Constable Grade II – ரூ.18,200 – 67,100/-
- Jail Warder Grade II– ரூ.18,200 – 67,100/-
- Firemen Posts – ரூ.18,200 – 67,100/-
TNUSRB Recruitment 2025 தேர்வு செயல்முறை:
- எழுத்துத் தேர்வு (பகுதி I – தமிழ் மொழி தகுதித் தேர்வு)
- எழுத்துத் தேர்வு (பகுதி II – முதன்மை எழுத்துத் தேர்வு)
- உடற்கூறு அளத்தல் தேர்வு
- உடற்தகுதிக்கான பொறுமைத் தேர்வு
- உடல்திறன் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
TNUSRB காவலர் தேர்வு 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து பணியிடங்களுக்கும் கட்டணம்: ரூ. 250/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
TNUSRB Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025.
TNUSRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (TNUSRB) அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/-க்குச் சென்று, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |